Thursday, September 28, 2006

இயற்கையின் குமுறல்

மனிதா!

நீ இயற்கை அன்னையின்
இதயத்தைப் பிளந்தாய்
ஆழ்துளை கிணறுகள் தோண்டி
அவள் உதிரத்தை உறிஞ்சினாய்

பூச்சிகொல்லி மருந்துகளை
அவள் மேனியில்
மூச்சுமுட்ட தூவி
அவளை மூச்சைத் திணறடித்தாய்

காலங்காலமாய் பொறுத்தவள்
உள்ளம் குமுறினாள்
அந்தக் குமுறல்தான்
இன்று சுனாமியாய்
நிலநடுக்கமாய்
உன்னைக் குமுறச்செய்கிறது.

நீ அவளைப் போற்றி வந்தால்
அவள் உன்னைக் காத்து நிற்பாள்...

1 Comments:

Blogger Divya said...

இயற்க்கையின் சீற்றத்திற்கு மனிதனே காரணம் என்று அருமையாக கூறியிருக்கிறீர்கள், அருமை!!

Sun Nov 18, 08:05:00 PM  

Post a Comment

<< Home