Wednesday, July 19, 2006

வேண்டுவன

எல்லைக்கோடுகள் இல்லாத
பூமி வேண்டும்

எழுத்தறிவில்லாதவர்
இல்லாமல் வேண்டும்

வறியவர் வாழ்க்கை
வளம்பெற வேண்டும்

வானம் எங்கள்
வசமாக வேண்டும்

டீக்கடை பெஞ்சுகள்
ஒழிந்திட வேண்டும்

தீவிரவாதிகள்
அழிந்திட வேண்டும்

நிறவெறி இல்லாத
மனிதர்கள் வேண்டும்

மதவெறி இல்லாத
சமூகங்கள் வேண்டும்

நதிநீர் எல்லாம்
நாட்டுடமையாக வேண்டும்

நாளெல்லாம் உழைத்திடும்
நல்லுடல் வேண்டும்

நீதி வழுவா
அரசொன்று வேண்டும்

நிம்மதியாய் மக்கள்
வாழ்ந்திட வேண்டும்

நித்திய இளமை
நான் பெற வேண்டும்

நீர்வீழ்ச்சியின் வேகம்
எனக்குள் வேண்டும்...

1 Comments:

Blogger Divya said...

\\டீக்கடை பெஞ்சுகள்
ஒழிந்திட வேண்டும்\\

இது நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் ஒரு காட்சி என்றாலும், எத்தனை பேரை சொம்பேறியாக அமர செய்கிறது அந்த இடம்!,
அதையும் குறிப்பிடிருப்பது அருமை, !

Sun Nov 18, 08:08:00 PM  

Post a Comment

<< Home